சமையல் கேஸ் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மத்திய அரசு கொடுத்த ஷாக்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
பொதுமக்களுக்கு குட்நியூஸ் சொன்ன அரசு - சமையல் சிலிண்டருக்கான மானியம் ரூ.200 ஆக நிர்ணயம்!!
சமையல் கேஸ் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - மத்திய அரசு கொடுத்த ஷாக்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

நாட்டில் சமையல் கேஸ், பெறுவதற்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு திடீரென உயர்த்தி இருப்பது சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 டெபாசிட் தொகை உயர்வு :

மத்திய அரசு சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து, எரிபொருட்கள் மற்றும் கேஸ் உள்ளிட்டவைகளை பெற்று மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக, சமையல் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் விலை பன் மடங்கு உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது சிலிண்டருக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. புதிதாக சமையல் கேஸ் இணைப்பு பெறுபவர்களுக்கான டெபாசிட் தொகை 750 ரூபாயாக உயர்த்தபட்டுள்ளது.

அதேபோல், 14.5 கிலோ எடை கொண்ட சமையல் உருளையின் வைப்புத்தொகை 1450 ஆக இந்த நிலையில் தற்போது இது, 2200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் 2 சிலிண்டர்கள் பெறுவோர் இனி 4400 ரூபாய் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்த விதிமுறைகள், புதிதாக சமையல் கேஸ் இணைப்பு பெற விரும்புவோர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here