இந்தியாவில் மீண்டும் முழு பொது முடக்கம்? – இன்று மாலை பாரத பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

0

கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால், மீண்டும் இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது குறித்து இன்று மாலை பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் ஆலோசனை :

இந்தியாவில் கொரோனாவின் டெல்டா மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் மிகவும் தீவிரம் எடுத்துள்ளது. இரண்டாம் அலை பரவல் சற்று குறைந்து, பொதுமக்கள் ஆறுதல் அடைந்து வந்த நிலையில் தற்போது மூன்றாம் அலை தனது ருத்ர தாண்டவத்தை தொடங்கியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி இயக்கம் உள்ளிட்ட முக்கிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மீண்டும் இந்தியாவில் முழு பொதுமுடக்கம் வருமோ? என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர். இன்று மாலை முக்கிய அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here