வைல்ட்லைப் போட்டோகிராஃபரான முதல் இந்திய பெண்…

0

தேனியில் பிறந்த ராதிகா ராமசாமி எம்பிஏ வரை படித்துள்ளார். அவருக்கு சிறு வயதில் இருந்தே இயற்கையை மிகவும் பிடிக்குமாம். 2003 ஆம் ஆண்டு இவர் தனது கேரியரை ஆரம்பித்துள்ளார். அவருங்கு விலங்கியல் போட்டோக்ராபர் ஆக வேண்டும் என்பது தான் கனவாம். ஒரு பெண்ணிற்கு கனவு என்று ஒன்று இருந்தால் அதனை அடைய மிகவும் கடினப்பட்டு வேண்டி இருக்கும். அதனை அடைய தனது வாழ்வில் பல சோதனைகளை சந்தித்து இருப்பர்.

அதிலும் வித்தியாசமான கனவாக இருந்து விட்டால், ரொம்பவே சிரமம். ஆனால், தற்போது ராதிகா ராமசாமி இந்தியாவின் முதல் பெண் விலங்கியல் போட்டோக்ராபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். பறவைகளின் மேல் அதிகமான ஈடுபாடு இருந்த காரணத்தால் இவர் அதற்கு முக்கியத்துவம் அளித்து புகைப்படம் எடுப்பாராம். போட்டோக்ராப் மட்டுமல்லாமல் பல டாக்குமெண்ட் பிலிம்ஸ் போன்றவையும் செய்துள்ளாராம். இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளாராம். இவர் பல புகைப்பட விழாக்களில் ஜூரி ஆகவும் இருக்கிறாராம்.
இவர் கூடுதலாக, “Inspiring Icon Award” என்ற விருதினையும் பெற்றுள்ளாராம். இவர் மட்டுமல்ல இவரது புகைப்படங்களும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் தான் உள்ளது. “மயக்கம் என்ன” திரைப்படத்தில் காட்டி இருப்பது போலவே ராதிகாவும் பல தடைகளை தாண்டி தான் தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here