இந்திய வீரர் பற்றி பாகிஸ்தான் EX கேப்டன் விமர்சனம்.., ஓ இது தான் விஷயமா.., ரோஹித் எடுக்கும் நடவடிக்கை??

0
இந்திய வீரர் பற்றி பாகிஸ்தான் EX கேப்டன் விமர்சனம்.., ஓ இது தான் விஷயமா.., ரோஹித் எடுக்கும் நடவடிக்கை??
இந்திய வீரர் பற்றி பாகிஸ்தான் EX கேப்டன் விமர்சனம்.., ஓ இது தான் விஷயமா.., ரோஹித் எடுக்கும் நடவடிக்கை??

T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் புவனேஷ் குமார் ஒரு சிறந்த வீரராக இருக்க மாட்டார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

புவிக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியதை அடுத்து T20 உலக கோப்பையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். மேலும் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உலக கோப்பைக்கான இந்திய அணியை BCCI அறிவித்து விடும். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடிய புவனேஷ் குமார் பற்றி சில விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அதாவது ஆசிய கோப்பையில் புவனேஷ் குமார் சிறப்பாக விளையாடிய 11 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் டெத் ஓவர்களில் பந்து வீசும் போது அவர் நிறைய ரன்கள் விட்டுக் கொடுத்தார் என சல்மான் பட் தெரிவித்துள்ளார். இதேபோன்று அவர் உலக கோப்பையில் செய்தால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். இதனால் அவரை இந்திய அணியில் எடுக்க வேண்டாம் என ரோகித் சர்மாவுக்கு சல்மான் பட் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் புவனேஷ் குமார் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி நான்கு ஓவரில் நான்கு ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

இது போன்ற ஒரு சாதனையை இதுவரை எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் படைத்தது கிடையாது. இதன் மூலம் புவி ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் இவரை அணியில் எடுக்க வேண்டாம் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கூறுவது சரியில்லை என இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் BCCI என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here