உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் இந்தியா…, வாய்ப்பை தவறவிட்ட இலங்கை!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் இந்தியா..., வாய்ப்பை தவறவிட்ட இலங்கை!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் இந்தியா..., வாய்ப்பை தவறவிட்ட இலங்கை!!

இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

WTC இறுதிப் போட்டி

இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. இதில், 3 போட்டிகளில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றிருந்தது. இதனால், இந்திய அணி 4 வது போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே WTC இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதே போல, நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்டையும் இலங்கை அணி வென்றால், WTC இறுதிப் போட்டி வாய்ப்பை இலங்கை அணியும் பெரும். ஏற்கனவே, WTC இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறிய நிலையில், 2வது அணியாக முன்னேற போவது இலங்கை அணியா?? இல்லை இந்தியா அணியா?? என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவி வந்தது.

பும்ராவின் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர்…, காயத்தால் டெஸ்டில் இருந்து விலகல்…, ஐபிஎல்லில் பங்குபெறுவது சந்தேகம்??

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இலங்கை அணி, போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியால், இலங்கை அணி WTC இறுதிப் போட்டி வாய்ப்பை பெற தவறியது. இதன் விளைவால், இந்திய அணி WTC இறுதிப் போட்டி 2வது முறையாக நுழைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here