ஆசிய கோப்பை 2023 போட்டியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, கனமழை காரணமாக இந்த போட்டியானது சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ஆட்டத்தில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா (11), சுப்மான் கில் (10) மற்றும் விராட் கோலி (4) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இஷான் கிஷான் (82) மற்றும் ஹர்திக் பாண்ட்யா (87) இருவரும் சற்று நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அந்த வகையில், முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி 11 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு டிக்ளேர் செய்துள்ளது.