இந்தியாவில் சராசரியாக ஒரு நாளில் 87 பெண்கள் கற்பழிப்பு – அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்!!

0

நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 32,033 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களிலும் 7.3 சதவீதமாகும். இது தொடர்பான தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டில் 33,356 மற்றும் 2017 ஆம் ஆண்டில் 32,559 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

தேசிய குற்ற பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் தினமும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக 4,05,861 பெண்கள் மீதான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது. இது 2018 ஐ விட 7 சதவீதம் அதிகமாகும் என்று அரசாங்கத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 3,78,236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

sexual abuse
sexual abuse

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளில் பெரும்பாலானவை ‘கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை’ (30.9 சதவீதம்), ‘பெண்கள் மீதான தாக்குதல்’ (21.8 சதவீதம்), ‘பெண்களை கடத்துதல்’ (17.9 சதவீதம்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ​​ஒரு லட்சம் பெண்களுக்கு பதிவு செய்யப்பட்ட குற்ற விகிதம் 2019 இல் 62.4 ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நாக்கை அறுத்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் குற்றவாளிகளுக்கு நிர்பயா வழக்கை போன்று தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here