
சர்வதேச இந்திய அணியானது, இன்று முதல் உலக கோப்பையை வெல்வதற்கான பாதையை நோக்கி பயணிக்க உள்ளது. அதாவது, அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்க உள்ள இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை நடைபெற உள்ளது. இந்த தொடரை வென்று உலக கோப்பைக்கான ஏக்கத்தை இந்திய அணிக்கு தீர்க்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தங்களது அணியை தயார்படுத்தும் நோக்கத்துடன் இன்று முதல் ஒருநாள் வடிவிலான ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கி விளையாட உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த தொடரில், அடுத்தடுத்த வெற்றிகளை பெறுமானால் இறுதி போட்டி (செப்டம்பர் 17) வரை விளையாட கூடும். இதனை தொடர்ந்து, செப்டம்பர் 22 முதல் 27 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 3 ல் உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்திலும், அக்டோபர் 8 முதல் நவம்பர் 12 வரை உலக கோப்பையின் லீக் போட்டிகளிலும் இந்திய அணி கவனம் செலுத்த உள்ளது. இதில், தொடர் வெற்றிகளை குவித்தால் உலக கோப்பையை வெல்வதற்கான இறுதி போட்டியில் (நவம்பர் 19) இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.