
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை வென்ற இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் ஒரு புறம் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான அனில் கும்ப்ளே செய்த செயல் பெரும் வைரலாக மாறி வருகிறது. அதாவது, கர்நாடகாவில் உள்ள பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார் ஓட்டுனர்கள் தங்களது வாழ்வாதரத்தை இழக்காமல் இருக்க நிவாரணம் வழங்க கோரி பெங்களூருவில் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் காரணமாக, விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்புவதற்கு தனியார் பஸ், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்டவை இல்லாததால் அரசு பேருந்தில் அனில் கும்ப்ளே பயணித்துள்ளார். இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் அனில் கும்ப்ளே வீடு திரும்பும் போது அரசு பேருந்தில் பயணம் என பதிவிட்டுள்ளார்.
BMTC trip back home today from the airport. pic.twitter.com/jUTfHk1HrE
— Anil Kumble (@anilkumble1074) September 11, 2023