இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு – அச்சத்தில் உறைந்துள்ள அரசு!!

0

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு, 2 லட்சத்தை கடந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

தொற்று அதிகரிப்பு :

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. உருமாறிய ஓமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,94,720 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,60,70,510 ஆக உயர்ந்துள்ளது. இது போக, ஒரே நாளில் 442 பேர் இறந்துள்ளதால், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,84,655 ஆக உயர்ந்துள்ளது.

அதே போல், ஒரே நாளில் 60,405 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,46,30,536 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை, 9,55,319 நபர்கள் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். நாட்டில்  நேற்று ஒரே நாளில் 85,26,240 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 1,53,80,08,200 ஆக உயர்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here