இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை ஆறுதல்!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களாக  குறைந்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதிப்பு குறைவு:

நாட்டில் கடந்த சில தினங்களாக உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவி வந்தாலும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை, என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  3,06,064 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 439 நபர்கள் இந்த தொற்றால் இறந்துள்ளதால், உயிரிழந்தவர் எண்ணிக்கை  4,89,848 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 2,43,495 நபர்கள் குணமடைந்துள்ளதால், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,68,04,145 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை, 1,62,26,07,516 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 27,56,364 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here