காட்டுத்தீயாய் பரவும் கொரோனா.. இந்தியாவில் ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு தொற்று!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2,58,089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 385 நபர்கள் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா அப்டேட்:

கடந்த சில தினங்களாக இந்தியாவில் டெல்டா மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வணிக வளாகங்கள் மற்றும் மால்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர் பொது இடத்தில் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,58, 089 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 385 நபர்கள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். மேலும், 1,51,740 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று மட்டும் 39,46,348 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here