இந்தியாவில் தொடங்கியது 4ம் அலை? மத்திய குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு! பீதியில் பொதுமக்கள்!!

0
இந்தியாவில் தொடங்கியது 4ம் அலை? மத்திய குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு! பீதியில் பொதுமக்கள்!!
இந்தியாவில் தொடங்கியது 4ம் அலை? மத்திய குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு! பீதியில் பொதுமக்கள்!!

இந்தியாவில், கொரோனா நான்காம் அலை பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைமை விஞ்ஞானி கங்காகேத்கர் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

மக்கள் அச்சம்:

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் தற்போது பரவியுள்ளது. இந்த வைரஸ், பாதிப்பு இந்தியாவில் கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. ஆனால், சீனா, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டன் ஆகிய நாடுகளில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

ஓமைக்ரான் வைரஸின் மரபணு மாற்றம் அடைந்த XE என்ற வைரஸ் இங்கு பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்தனர். இந்த மாறுபாடு அடைந்த வைரஸ், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வதோராவுக்கு வந்த ஒரு முதியவருக்கு உறுதி செய்யப்பட்டது.

பிரசவத்தின் போது பெரும் சிக்கலை சந்தித்த நடிகை காஜல் அகர்வால்.., அவரே வெளியிட்ட எமோஷனல் பதிவு!

இந்நிலையில் நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு 4,30,44,280 ஆக உயர்ந்துள்ளதாகவும் குடும்ப நல அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குனர் தலைமை விஞ்ஞானி கங்காகேத்கர் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் தோல்விக்கு நான் தான் காரணம் – பொறுப்பேற்ற பிரபல நடிகர்! உறுதியான ரஜினியின் தலைவர் 169 !!

மரபணு மாறிய வைரஸ் பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டாலும், இங்கு 4ம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று உறுதியளித்துள்ளார்.  கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி, கல்லூரிகள் திறக்க பட்டது மற்றும், பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் இருந்து வந்ததே தற்போது வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதன் காரணம் என தெரிவித்துள்ளார். இதுபோக, தொடர்ந்து மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here