சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்திய நாட்டின் மக்கள் தொகை – நிபுணர்கள் கருத்து!!

0

உலக அளவில் மக்கள் தொகை கணக்கீட்டில் சீன நாடு முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் வரும் வருடங்களில் சீனாவின் மக்கள் தொகையை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொகை:

கடந்த 2019ம் ஆண்டில் சீன நாட்டின் மக்கள் தொகை 143 கோடியாக இருந்தது. அதேபோல் இந்திய நாட்டின் மக்கள் தொகை 137 கோடியாக இருந்தது. இதனை ஐநா அறிவித்தது. தற்போது வரை உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீன நாடு முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் வருகிற 2027ம் ஆண்டில் இந்திய நாட்டின் மக்கள் தொகை சீன நாட்டினை முந்திவிடும் என்று ஐநா கணித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சீனா நாடு அந்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டது. அதில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வேளைக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தது. அதேபோல் சீனாவில் தற்போது குழந்தைபேறும் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ரெட் அலர்ட் – மீனவர்களே எச்சரிக்கை!!

இந்நிலையில் தற்போது சீன மக்கள் தொகை கணக்கீட்டு நிபுணர்கள் ஓர் தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி அவர்கள் கூறியதாவது, ஐநா 2027ம் ஆண்டில் தான் இந்தியா சீனாவின் மக்கள் தொகையை முந்திவிடும் என்று கணித்திருந்தது. ஆனால் தற்போதையை கணக்கீட்டில் இந்திய நாடு வருகிற 2024ம் ஆண்டுக்கு முன்னரே சீன நாட்டின் மக்கள் தொகையை முந்திவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here