
இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.வின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து “இந்தியா” என்ற கூட்டணியை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே தேர்தல் நடத்தும் நோக்கில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் மசோதா நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதோடு நாட்டின் பெயர் “இந்தியா” என்பதை “பாரதம்” என மாற்றம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு தெம்பூட்டும் விதமாக செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் அழைப்பிதழில் “பாரத ஜனாதிபதி” என இடம்பெற்றுள்ளது. இது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.