இறுதி போட்டிக்கு செல்லும் இந்திய அணி.., கடைசியாக கிடைத்த அதிர்ஷ்டம்.., இந்த வாய்ப்பை யாவது தக்க வைக்குமா?

0
இறுதி போட்டிக்கு செல்லும் இந்திய அணி.., கடைசியாக கிடைத்த அதிர்ஷ்டம்.., இந்த வாய்ப்பை யாவது தக்க வைக்குமா?
இறுதி போட்டிக்கு செல்லும் இந்திய அணி.., கடைசியாக கிடைத்த அதிர்ஷ்டம்.., இந்த வாய்ப்பை யாவது தக்க வைக்குமா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் இறுதி போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதால் அதை இந்திய அணி தக்க வைத்துக் கொள்ளுமா என பார்க்கலாம்.

எஞ்சிய போட்டியில் யார் வெல்ல வேண்டும்!

ஆசிய கோப்பை தொடர் இந்த வார இறுதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சூப்பர் 4 ஆட்டத்தில் நான்கு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது. மேலும் இந்த பிரிவில் நடைபெற்ற இரு போட்டியிலும் இந்திய அணி தொடர் தோல்வி அடைந்து. இதனால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஆனால் கடைசியாக இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது. அதாவது மூன்று சூப்பர் 4 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் மூன்று ஆட்டங்கள் மீதம் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு மாறாக பாகிஸ்தான் அணி இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் மட்டுமே இந்திய அணி ரன் ரேட் அடிப்படையில் இறுதி போட்டிக்குள் நுழையும்.

ஆனால் தற்போது மோசமாக விளையாடி வரும் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறுமா என்பது தெரியவில்லை. ஒரு வேலை இந்த வாய்ப்புகள் அனைத்தையும் இந்திய அணி தவற விட்டால் இறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலைகள் அனைத்தையும் கடந்து இந்திய அணி எட்டாவது முறையாக ஆசிய கோப்பை பட்டத்தை வெல்லுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here