வாகன ஓட்டிகளே எச்சரிக்கை – இதை செய்யலைன்னா ரூ.1000 அபராதம்! மத்திய அமைச்சர் திட்டவட்டம்!!

0
வாகன ஓட்டிகளே எச்சரிக்கை - இதை செய்யலைன்னா ரூ.1000 அபராதம்! மத்திய அமைச்சர் திட்டவட்டம்!!

இந்தியா முழுவதும் காரில் பயணிப்பவர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்து, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, அதிரடி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் தீவிரம்:

பெரும்பாலான மக்கள், அதிகம் பயன்படுத்தும் தனிப்பட்ட போக்குவரத்து சேவைகளில் ஒன்று கார். இந்தக்  கார் போக்குவரத்தை பயன்படுத்தும் போது, முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் ஓட்டுநர் மற்றும் சக பயணி சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும் அப்படி அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு  அறிவித்திருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது அதில் முக்கிய மாற்றம் கொண்டு வரும் விதமாக, காரின் பின்னிருக்கையில் அமர்பவர்களும்  கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற  புதிய சட்டத் திருத்தத்தை விரைவில் மேற்கொள்ள உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அப்படி சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள்  சாலை விபத்தை 50% குறைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு என்றும், இதனால் இந்த சட்ட திருத்தம் விரைவில் அமலாகும் என்றும் அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் 3 நாட்களில் வெளியிடப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here