இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையே வர்த்தகம் தொடர்பாக சீரான உறவு நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில், இந்திய அரசு தொடர்பு இருந்திருக்கலாம் என கனடா அரசு கூறியத்துடன், இந்திய தூதரக அதிகாரியையும் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அரசு, கனடா தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டு பதிலடி கொடுத்துள்ளது. இதனால், இந்தியா-கனடா நாடுகளின் உறவு நிலையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசானது கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தும்படி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களே உஷார்., அடுத்த சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!