இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!!

0

பாரத் பையோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவாக்ஸின்’ மீதான மனித பரிசோதனை தொடங்கி உள்ளது. இதில் நல்ல முடிவு கிடைக்கப்பெற்றால் விரைவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தடுப்பூசி பரிசோதனை:

சீனாவில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். உலகில் 1.2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதற்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் உலகில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பல கட்டங்களில் உள்ளனர்.

உ.பி என்கவுண்டர் சம்பவம் – 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ‘கேங்க்ஸ்டர் விகாஸ் துபே’ கைது!!

Covaxin
Covaxin

இந்நிலையில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லா ஹைதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. இவரது பாரத் பையோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்துடன் இணைந்து கொரோனாவிற்கு ‘கோவேக்ஸின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்து, இதற்கான அடிப்படை சோதனைகள் எல்லாம் நடந்து முடிந்தது. தற்போது மனிதர்களிடம் இம்மருந்தை சோதனை செய்ய உள்ளனர். இதற்கான பணி நேற்று ஹைதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது.இது வெற்றி பெற்றால் மருத்துவ உலகின் பெரும் திருப்புமுனையாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here