மீண்டும் தவறு செய்யும் இந்திய அணி.., T20 உலக கோப்பையில் வெற்றி பெறுவது சந்தேகம் தான்.., பாகிஸ்தான் வீரர் கருத்து!!

0
மீண்டும் தவறு செய்யும் இந்திய அணி.., T20 உலக கோப்பையில் வெற்றி பெறுவது சந்தேகம் தான்.., பாகிஸ்தான் வீரர் கருத்து!!
மீண்டும் தவறு செய்யும் இந்திய அணி.., T20 உலக கோப்பையில் வெற்றி பெறுவது சந்தேகம் தான்.., பாகிஸ்தான் வீரர் கருத்து!!

இந்திய கிரிக்கெட் நிறுவனம் அனைத்து தொடர்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தவறுகள் செய்து வருவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா கூறியுள்ளார்.

தவறு செய்யும் இந்திய அணி!!

T20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய அணியை BCCI நேற்று வெளியிட்டது. இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், கே எல் ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். மேலும் இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காரணத்தினால் உலக கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது ஒரு புறம் இருந்தாலும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா இந்திய தேர்வர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்மில் விளையாடி வரும் ரிஷப் பந்தை ஏன் அணியில் எடுக்க வேண்டும். இவர் அனைத்து போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது தெரிந்தும் இவரை திரும்பத் திரும்ப அணியில் எடுப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக தான் இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இவருக்கு பதில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பல வீரர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய அணி விளையாட வாய்ப்பு கொடுக்கலாம். அதன் படி பார்க்கையில் இந்தியாவுக்காக பல சர்வதேச போட்டிகளில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்துள்ளார். ஆனால் அவர் போன்ற வீரருக்கு வாய்ப்பு தராமல், இது போன்ற வீரர்களை வைத்து கொண்டு இந்திய அணி T20 உலக கோப்பை தொடரை எப்படி சமாளிக்க போகிறார்கள் என தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here