போட்றா வெடிய., இப்போதான் 5ஜி வந்துச்சு, அதுக்குள்ள 6ஜியா? பிரதமர் மோடி கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்!!

0
போட்றா வெடிய., இப்போதான் 5ஜி வந்துச்சு, அதுக்குள்ள 6ஜியா? பிரதமர் மோடி கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்!!

இந்தியாவில், தற்போது 5ஜி சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இன்னும் 8 ஆண்டுகளில்  6 ஜி இணைய சேவை சாத்தியமாகும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

6ஜி சேவை:

இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை சமாளிக்க, மத்திய அரசு ஏற்கனவே 5g சேவையை  அறிமுகப்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக 13  நகரங்களில், அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை இரண்டு ஆண்டுகளில்  இந்தியா முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது. குறைந்த செலவில், நிறைந்த சேவையாக இந்த 5ஜி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என  பிரதமர் உறுதி அளித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் இந்த சேவை அனைவருக்கும் கிடைக்கும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த சேவையை தொடர்ந்து 6ஜி இணைய சேவைகளை தொடங்கும் முயற்சியை  மத்திய அரசு எடுத்து வருகிறது.

தொழில்நுட்ப புரட்சியை நோக்கி இந்தியா வேகமாக நடை போட்டு வருவதால், இன்னும் 8 ஆண்டுகளுக்குள் இந்த 6ஜி சேவை சாத்தியமாகும்  என பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால், இதை பயன்படுத்த உள்ள பயனர்கள் பலத்த உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here