நாடு முழுவதும் 500 ரூபாய் நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி கொடுத்த முக்கிய அறிவிப்பு!!

0
நாடு முழுவதும் 500 ரூபாய் நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி கொடுத்த முக்கிய அறிவிப்பு!!

நாடு முழுவதும் 500 ரூபாய் நோட்டுகள், செல்லாது என  வெளியான வதந்தி குறித்து  முக்கிய விளக்கம் ஒன்றை ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ளது.

 ரிசர்வ் வங்கி அறிவிப்பு:

கடந்த 2016 ஆம் ஆண்டு, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, இந்த பணத்தாள்கள், வங்கியால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து,  புதிய 2000 ரூபாய் மற்றும் 500ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் தற்போது, இணையத்தில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு, ஒன்று செல்லாதது என தகவல் வெளியானது.

அதாவது, வெளியிடப்பட்ட படத்தின் காந்தியின் போட்டோ அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டில், அதன் அருகில் பச்சை நிற கோடு உள்ளது. அடுத்த புகைப்படத்தில், காந்தியின் புகைப்படத்தில் இருந்து பச்சைக் கோடு சிறிது தொலைவில் உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்துக்கு அருகில் இந்த கோடு உள்ளது.

இந்த தகவல்களை வெளியிட்டு, காந்தி அருகில் பச்சை கோடு போடப்பட்டிருக்கும் அந்த 500 ரூபாய் நோட்டு செல்லாதது என  போட்டவுடன் தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்த ரிசர்வ் வங்கி, இது போலியான செய்தி என்றும், PIB Fact Check மூலம் சரிபார்த்தபோது இந்த தகவல் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. போட்டோவில் காட்டப்பட்ட இரண்டு நோட்டுகளுமே செல்லுபடியாகும் என PIB விளக்கம் கொடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here