கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் 2வது தடுப்பூசி – மனிதர்கள் மீது பரிசோதிக்க அனுமதி..!

0

பாரத் பையோடெக் நிறுவனத்தை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 2வது தடுப்பூசி தயாராகி உள்ளது.

கொரோனவுக்காக உலகம் முழுவதும் போராட்டம்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் லட்சக்கணக்கான பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் ரஷ்ய நிறுவனம், சீனா நிறுவனம், அமெரிக்க நிறுவனம் போன்றவை விலங்குகளிடம் அதனைப் பரிசோதனை நடத்திவிட்டு மனிதர்களுக்குப் பரிசோதனை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனமும் இறங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனவுக்கான 2வது மருந்து..!

இந்நிலையில் இந்தியாவின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த சைடஸ் கெடில்லா என்ற நிறுவனம் கொரோனா பரவ தொடங்கியதும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய அந்த நிறுவனம் ஏப்ரல் மாத இறுதியில் ஆய்வக சோதனையில் முதற்கட்ட வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சைடஸ் கெடில்லா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவில் ஏற்கனவே ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here