
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூபுக்கு என்று உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பார்வையாளர்கள் இருக்கின்றனர். இதனை பயன்படுத்தி பல யூடியூபர்கள் சில தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது யூடியூப் சமூக ஊடகம் இது போன்ற தவறான வீடியோக்களை கண்டறிந்து யூடியூபில் இருந்து நீக்கி வருகிறது. அதன்படி நடப்பாண்டில் முதல் மூன்று மாதங்கள் நீக்கப்பட்ட விடியோக்களில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறதாம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது தொடர்பாக யூடியூப் சமூக வலைதள நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 64.8 கோடி வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் பிரேசில் நாட்டில் இருந்து 4,49,759 வீடியோக்களும், அமெரிக்காவில் இருந்து 6.55 லட்சம் வீடியோக்களும் மற்றும் ரஷ்யாவில் இருந்து 4,91,933 வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்ட வீடியோக்கள் 19 லட்சம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் எந்த வித பாரபட்சம் பார்க்க மாட்டோம் என்று யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது.