இந்திய அணி போட்டியை ஒளிப்பர செய்யும் ஜியோ சினிமா…, களத்தில் சந்திப்போம்…, வெளியான தகவல்!!

0
இந்திய அணி போட்டியை ஒளிப்பர செய்யும் ஜியோ சினிமா..., களத்தில் சந்திப்போம்..., வெளியான தகவல்!!

சர்வதேச இந்திய அணியானது நாளை (ஜூன் 7) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விளையாட தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள இந்த தொடரில், இந்திய அணி வென்று நீண்ட நாள் உலக கோப்பைக்கான ஏக்கத்தை தீர்க்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு இந்திய அணி, 50 ஓவர் உலகக் கோப்பைக்காக திட்டமிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில், இந்திய அணியானது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஜூலை 12 மற்றும் 20 தேதியிலும், ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளையும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

TET தேர்வர்கள் கவனத்திற்கு.., பணி நியமனம் குறித்து வெளியான அதிரடி தகவல்.., முழு விவரம் உள்ளே!!

இதனை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளையும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை விளையாடவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் ஒளிபரப்பாளர்களின் இந்திய சுற்றுப்பயணத்தை ஐபிஎல்லை போலவே JioCinema டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதே போல, தொலைக்காட்சியில் டிடி ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here