IND vs WI 3rd T20: தொடரை காப்பாற்றும் இந்தியா?? பிளேயிங் லெவனில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!

0
IND vs WI 3rd T20: தொடரை காப்பாற்றும் இந்தியா?? பிளேயிங் லெவனில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!
IND vs WI 3rd T20: தொடரை காப்பாற்றும் இந்தியா?? பிளேயிங் லெவனில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!

வெஸ்ட் இண்டீஸுக்கு சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று 3வது டி20 போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்க உள்ளது. பெரும்பாலான டி 20 தொடர்களை வென்ற இந்திய அணி, இன்றைய 3 வது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை இழப்பதில் இருந்து தப்பிக்க முடியும். இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்திய அணியை பொருத்த வரையில், டாப் ஆர்டரில் உள்ள பேட்ஸ்மேன்கள் நிலை நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினால் வெற்றிக்கு கைகொடுக்கும். இதில், திலக் வர்மா மட்டுமே இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கிறார். தொடரை வெல்லும் (வெஸ்ட் இண்டீஸ்) போட்டியாகவும், தொடரை இழக்க (இந்தியா) கூடாது என போராட்டத்தில் நடைபெற இருக்கும் இன்றைய போட்டியில் தரமான பிளேயிங் லெவனை இரு அணிகளும் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(சி), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

பிராண்டன் கிங், ரோவ்மேன் பவல்(சி), ஷிம்ரோன் ஹெட்மியர், கைல் மேயர்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், அல்சாரி ஜோசப், ஏஜே ஹோசைன், ஓசி மெக்காய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here