IND vs WI: தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியா…, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!!

0
IND vs WI: தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியா..., 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!!
IND vs WI: தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியா..., 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது டி20 போட்டி நேற்று பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில், சுப்மன் கில் 7 ரன்களில் வெளியேற இவரை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதன் பின் களமிறங்கிய திலக் வர்மா நிதானமாக விளையாடி அரைசதம் (51) அடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருப்பினும், இஷான் கிஷன் 27, சஞ்சு சாம்சன் 7, ஹர்திக் பாண்டியா 24, அக்சார் பட்டேல் 14 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய, வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2-0 என தொடரை வெல்வதிலும் முன்னிலை வகிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here