IND vs WI: முதல் T20யில் வெற்றியை தவற விட்ட இந்தியா…, 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!!

0
IND vs WI: முதல் T20யில் வெற்றியை தவற விட்ட இந்தியா..., 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!!
IND vs WI: முதல் T20யில் வெற்றியை தவற விட்ட இந்தியா..., 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!!

இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று பிரையன் லாரா மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மேன் பவல் 48, நிக்கோலஸ் பூரன் 41 பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், இந்தியா சார்பாக திலக் வர்மா 39, சூர்யகுமார் யாதவ் 21 இவர்கள் இருவர் மட்டுமே 20 ரன்களுக்கு மேல் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here