அறிமுக ஆட்டத்தில் அசத்திய திலக் வர்மா…, இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!!

0
அறிமுக ஆட்டத்தில் அசத்திய திலக் வர்மா..., இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!!
அறிமுக ஆட்டத்தில் அசத்திய திலக் வர்மா..., இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் மூலம், இந்தியாவின் திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் சர்வதேச போட்டிக்கான அறிமுகத்தை பெற்றனர். இதில், இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மாவுக்கு தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ கால் செய்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த இரு வீரர்களும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாடி உள்ளனர். இவர்களின் நட்பு சர்வதேச அணிக்காக விளையாடும் போதும் தொடர்வது ரசிகர்கள் உண்மையான நட்பை வெளிப்படுத்துவதாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை, இந்திய அணி தோல்வியை தழுவினாலும் அறிமுக ஆட்டத்தில் திலக் வர்மா 22 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 39 ரன்கள் எடுத்திருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்தியாவின் கோல் மழையில் நனைந்த சென்னை…, சீனாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடக்கம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here