இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகிய சஞ்சு சாம்சன்…, மாற்று வீரரை தயார்படுத்திய பிசிசிஐ!!

0
இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகிய சஞ்சு சாம்சன்..., மாற்று வீரரை தயார்படுத்திய பிசிசிஐ!!

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து, காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விலகி உள்ளார். இவருக்கு மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது.

IND vs SL:

இந்திய அணி இன்று இலங்கை அணிக்கு எதிராக 2வது டி20 போட்டியை புனேவில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. முதல் போட்டியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், இலங்கை அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இன்று பதிலடி கொடுக்க கூடும். இதனால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டிக்காக இரு அணிகளும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கிடையில், இந்தியாவின் சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் பில்டிங் செய்யும் போது முழங்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவரது காயத்தை ஸ்கேன் செய்த மருத்துவ குழு இவருக்கு ஓய்வு தேவை என்று கூறியுள்ளனர். இதனால், இலங்கைக்கு எதிராக மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் இருந்து சஞ்சு சாம்சன் விலகி உள்ளார். இவருக்கு பதில், ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஜிதேஷ் சர்வதேச அணிக்கு அறிமுகமாக உள்ளார்.

IND vs SA T20: உலக கோப்பைக்கு முன் தென் ஆப்ரிக்கா தொடரை வென்று அசத்திய இந்திய இளம் படை!!

இலங்கைக்கு எதிரான இந்தியாவின் டி20 அணி:

ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here