ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணியானது இன்று (நவம்பர் 2) இலங்கை அணியை எதிர்த்து தனது 7 வது லீக் போட்டியில் மோத உள்ளது. இந்த உலக கோப்பையில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியோ, 6 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று, அரையிறுதி வாய்ப்பை அதிகபட்சம் இழந்துள்ளது. இருப்பினும், இலங்கை அணியானது இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்கு தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் லிஸ்ட்:
இந்தியா:
ரோஹித் சர்மா (சி), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
இலங்கை:
பாதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ்(சி), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், துஷான் ஹேமந்த, மகேஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க
நேரம்: மதியம் 2:00 PM
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
டாஸ்:
டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி வருகின்றனர். இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு மிகுந்த இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றியை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.