IND VS SL Asia Cup – சம பலத்தில் களமிறங்கும் அணிகள்…, வாகை சூட போவது எது?

0
IND VS SL Asia Cup - சம பலத்தில் களமிறங்கும் அணிகள்..., வாகை சூடும் அணி எது?
IND VS SL Asia Cup - சம பலத்தில் களமிறங்கும் அணிகள்..., வாகை சூடும் அணி எது?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றுக்கான ஆட்டத்தில் இரு அணிகளின் குறித்த விவரங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

போட்டி விவரங்கள்!

ஆசிய கோப்பை தொடர் இந்த வார இறுதியில் முடிவடையுள்ள நிலையில் இன்று சூப்பர் 4 சுற்றுக்கான மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர். இந்த இரு அணிகளும் தற்போது சம பலத்தில் உள்ளனர். இதில் இந்திய அணி கடைசியாக பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு ஸ்ரீலங்கா அணியை எதிர்கொள்கிறது. அதேபோன்று ஸ்ரீலங்கா அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய பலத்தில் இந்திய அணியை சந்திக்க தயாராக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. அதே போன்று தான் இலங்கை அணியும். இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தற்போது சிறப்பாக ஆடி வருகின்றனர். இதனால் எதிரணி வீசும் ஒவ்வொரு பந்தையும் சரியான முறையில் எதிர்கொண்டு அதிக ரன்கள் குவிக்கின்றனர்.

இந்நிலையில் கடைசி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிய போதிலும் பவுலர்கள் தான் தோல்வி அடையும் நிலைக்கு தள்ளினர். அந்த தவறை இந்த போட்டியில் செய்யாமல் இருந்தாலே இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்தியா:

ரோஹித் சர்மா (கேட்ச்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (வி.கே), அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

இலங்கை:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (வாரம்), சரித் அசலங்க, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷனக (கேட்ச்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here