
ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசனுக்கான சூப்பர் 4 சுற்றுகள் தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 53, கேஎல் ராகுல் 39 மற்றும் இஷான் கிஷன் 33 ரன்கள் எடுத்திருந்தனர். இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி குல்தீப் யாதவ் (4), ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 41.3 ஓவரிலேயே 172 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம், இறுதிப் போட்டியில் முன்னேறுவதற்கு இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.