IND vs SL 3rd T20: தொடரை வெல்ல போவது யார்?? இலங்கைக்கு எதிரான கடைசி யுத்தம்!! பிளேயிங் லெவன் இதோ!!

0
IND vs SL 3rd T20: தொடரை வெல்ல போவது யார்?? இலங்கைக்கு எதிரான கடைசி யுத்தம்!! பிளேயிங் லெவன் இதோ!!

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2 போட்டிகள் முடித்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் 1-1 சமநிலையில் உள்ளது. இதனால், கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் நிலையில் இரு அணிகளும் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்திய அணி தனது சொந்த மண்ணில், இந்த ஆண்டின் முதல் தொடரை கைப்பற்ற வேண்டிய காட்டாயத்தில் உள்ளதால், தரமான பிளேயிங் லெவனை களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த இரு போட்டிகளிலும், சொற்ப ரன்களில் வெளியேறிய சுப்மன் கில்லுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

T20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு…, முழு விவரம் உள்ளே!!

மேலும், 2வது டி20யில் அதிக நோ பால்களை வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு மாற்று வீரராக, ஹர்சல் படேல் களமிறங்க கூடும். இந்த போட்டி நடைபெறும் மைதானமானது, பேட்டிங்கிற்கு அதிக சாதகமானது என்பதால், உயர்ந்த ஸ்கோர்களை இரு அணிகளும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (சி), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஹர்சல் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here