IND vs SL T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?? இலங்கைக்கு எதிராக நாளை 2வது போட்டி!!

0
IND vs SL T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?? இலங்கைக்கு எதிராக நாளை 2வது போட்டி!!
IND vs SL T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?? இலங்கைக்கு எதிராக நாளை 2வது போட்டி!!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றதால், 1-0 என தொடரை கைப்பற்றுவதில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், இந்த தொடரை கைப்பற்ற நாளை மகாராஷ்டிராவில் நடைபெறவிருக்கும் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு, இலங்கை அணி அதிக நெருக்கடி கொடுக்க கூடும். அதாவது, முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இலங்கை அணி பழிதீர்த்து கொள்வதோடு, தொடரை வெல்வதற்கும் முயற்சிக்கும். இதனால், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த 2வது டி20 போட்டி நடைபெற இருக்கும், மைதானமானது, சேஸிங் செய்யும் அணிக்கே அதிக சாதகமானது.

தொடர்ந்து எல்லை மீறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை., செய்தியாளர்களை மிரட்டி கடும் வாக்குவாதம்!!

இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி நடைபெறும், மகாராஷ்டிராவில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமே தவிர மழைக்கு வாய்ப்பு மிக குறைவு தான். இதன் விளைவால் போட்டிக்கு எந்த இடையூறும் ஏற்படாது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேறிய சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் நாளை சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

இஷான் கிஷன், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here