IND vs SL 1st T20 2023: ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா??

0
IND vs SL 1st T20 2023: ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா??
IND vs SL 1st T20 2023: ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா??

இந்திய அணி இன்று இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை விளையாட உள்ளது.

IND vs SL:

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட திட்டமிட்டது. இந்த இரு தொடருக்காக இலங்கை அணியானது இந்தியா வந்துள்ளது. இதில், டி20 தொடருக்கான இளம் இந்திய அணியே ஹர்திக் பாண்டியா வழி நடத்த உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் தலைமையில் இந்திய அணி இந்த தொடரை வெல்லும் பட்சத்தில், எதிர்வரும் போட்டிகளில் டி20 தொடர்களுக்கு இவரே இந்திய அணியை தலைமை தாங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தங்களது சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் புத்தாண்டின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்கும்.

IND vs SL: இவரை நம்பி தான் இந்திய அணி களமிறங்குகிறது.., கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!

மேலும், இந்த இரு அணிகளும் கடைசியாக ஆசிய கோப்பையில் மோதின. இந்த போட்டியில், இலங்கை அணி கடைசி ஓவரில் திரிலான வெற்றியை பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையும் தட்டி சென்றது. இதில், அடைந்த தோல்விக்கு இந்திய அணி இன்று நடைபெற இருக்கும் போட்டி மூலம் பழி தீர்க்கும் என ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here