IND vs SL 1st ODI: யார் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு…, முழு விவரம் உள்ளே!!

0
IND vs SL 1st ODI: யார் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு..., முழு விவரம் உள்ளே!!
IND vs SL 1st ODI: யார் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு..., முழு விவரம் உள்ளே!!

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாடி வருகிறது. இந்த இரு தொடர்களில் இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற வெற்றி கணக்கில் கைப்பற்றி விட்டது. இதையடுத்து நாளை முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த தொடரின் முதல் போட்டி, நாளை அசாமில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானமானது, பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டுக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரக்கூடியதாகும். ஆனால், போட்டி நடைபெறும் போது சுழற்பந்து வீச்சுக்கும் பேட்டிங்கும் அதிக சாதகத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், நாளைய போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs SL ODI: இலங்கைக்கு எதிராக பும்ரா களமிறங்குவதில் திடீர் சிக்கல்!!

மேலும், ஒருநாள் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில், இந்திய அணி திட்டம் வைத்துள்ளதால், உலக கோப்பைக்கான அணி தேர்வு நாளை முதல் தொடங்க கூடும். இதனால், பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, டி20 தொடரை இழந்த இலங்கை அணி, ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்க எண்ணும். இதனால், நாளை போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (சி), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், முகமது ஷமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here