மீண்டும் கேப்டன் மாற்றம்.., உங்களால தான் இந்தியாவுக்கு தோல்வி.., திரும்பவும் இதே தப்ப பண்றீங்க!!

0
மீண்டும் கேப்டன் மாற்றம்.., உங்களால தான் இந்தியாவுக்கு தோல்வி.., திரும்பவும் இதே தப்ப பண்றீங்க!!
மீண்டும் கேப்டன் மாற்றம்.., உங்களால தான் இந்தியாவுக்கு தோல்வி.., திரும்பவும் இதே தப்ப பண்றீங்க!!

ஷிகர் தவன் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ளதாக BCCI அறிவித்துள்ளது.

வேற வழியே இல்லை!!

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து தற்போது டி20 உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. இந்த உலக கோப்பையில் வெற்றி பெறும் வகையில் BCCI திறமையான வீரர்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த உலக கோப்பைக்கு பயிற்சி பெறும் விதமாக இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இம்மாத இறுதியில் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் களமிறங்க உள்ளார். மேலும் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தென்னாபிரிக்கா தொடரில் ஓய்வழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் நிறுவனம் இதுபோன்ற தொடர்ந்து கேப்டன்களை மாற்றிக்கொண்டு வந்தது தான் ஆசிய கோப்பை தோல்விக்கு முக்கிய காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் இது போன்ற தவறை இந்திய அணி நிர்வாகம் கையில் எடுப்பது டி20 உலக கோப்பைக்கு சரியான முடிவாக அமையாது. இது பற்றி BCCI இடம் காரணம் கேட்டபோது தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு வீரர்கள் செல்ல உள்ளனர். இதில் விராட் கோலி, ரோஹித் போன்ற முன்னணி வீரர்கள் தென்னாப்பிரிக்கா தொடரின் போதே செல்ல உள்ளதால் கேப்டன்களை மாற்றும் நிலை ஏற்பட்டது என BCCI விளக்கமளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here