ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முடிவடைந்தது. இந்த போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்திருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், இந்திய வீரர்களான ரோஹித் சர்மா 56, சுப்மன் கில் 58, விராட் கோலி 122*, கே எல் ராகுல் 111* ரன்கள் எடுத்து அசத்தினார். இவர்களை தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்களை பதம் பார்த்த குல்தீப் யாதவ் 5, பும்ரா, ஹர்திக் பாண்டியா, தாகூர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றி 128 ரன்களுக்குள் சுருட்டினர். இதனால், 228 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியாவின் மாபெரும் வெற்றியை, ஜம்மு, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள இந்திய ரசிகர்கள் நள்ளிரவில் பட்டாசுகள் வைத்தும், மேளதாளங்களுடன் ஆடி பாடி கொண்டாடியும் தேசிய கொடியை ஏந்தி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Cricket fans celebrating India's victory against Pakistan at Jammu.pic.twitter.com/eH0ATvLMxl
— Johns. (@CricCrazyJohns) September 12, 2023