மண்டையில் தட்டி புத்தி சொன்ன ரோஹித்.., ரிஷப் பந்தை திட்டியது ஏன்.., காரணம் தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்!

0
மண்டையில் தட்டி புத்தி சொன்ன ரோஹித்.., ரிஷப் பந்தை திட்டியது ஏன்.., காரணம் தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்!
மண்டையில் தட்டி புத்தி சொன்ன ரோஹித்.., ரிஷப் பந்தை திட்டியது ஏன்.., காரணம் தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தலையில் அடிப்பது போன்று பாவலா காட்டி கண்டித்துள்ளார்.

இந்திய கேப்டன் ரோஹித்!

ஆசிய கோப்பை தொடர் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இந்த வாரத்துடன் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ள நிலையில் நேற்று சூப்பர் 4 சுற்றுக்கான ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தனர். இதன்பின் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின்னர் களம் இறங்கிய நவாஸ், ரிஸ்வான் இருவரும் சிறப்பான முறையில் பாட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காக இருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இறுதி ஓவரில் ஏழு ரன்கள் மட்டும் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஓவரில் ஆசிப் அலி ஒரு பவுண்டரி அடித்ததால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா அணி வீரர்களிடம் பேசி உள்ளார்.

அப்போது ரிஷப் பந்த் விளையாடிய போது தவறான ஷார்ட் அடித்து ஆட்டம் இழந்திருக்கக் கூடாது. இதனால் அவரை ஓய்வறையில் கண்டித்தேன் எனவும் கூறியுள்ளார். மேலும் இவர் கண்டிக்கும் போது தலையில் அடிப்பது போன்று செய்துள்ளார். அதே போன்று ஹர்திக் பாண்டியாவும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேசிய ரோஹித் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here