IND vs PAK: ஜூன் 21 ல் இந்தியா பாகிஸ்தான் அணி மோதல்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
IND vs PAK: ஜூன் 21 ல் இந்தியா பாகிஸ்தான் அணி மோதல்..., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
IND vs PAK: ஜூன் 21 ல் இந்தியா பாகிஸ்தான் அணி மோதல்..., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

SAFF சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில், இந்திய அணியானது தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

SAFF சாம்பியன்ஷிப்:

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பால் (SAFF) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச ஆடவர் அணிகளுக்கு இடையே SAFF சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரின் 14வது சீசன் வரும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், குவைத், மாலத்தீவு, நேபாளம், பூடான், பங்களாதேஷ் மற்றும் லெபனான் ஆகிய 8 அணிகள் பங்கு பெற உள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தொடரின் போட்டிக்கான அட்டவணை SAFF தற்போது வெளியிட்டுள்ளது. இதில், 8 அணிகள் தலா 4 அணிகளாக குரூப் A மற்றும் குரூப் B என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குரூப் உள்ள 4 அணிகளும், மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை லீக் போட்டியை போல மோத உள்ளன. இதன் முடிவில், குரூப் A & B யில் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இதனை தொடர்ந்து இறுதிப் போட்டியானது ஜூலை 4ம் தேதி நடைபெற இருக்கிறது.

தளபதி 68ல் இந்த பிளாப் நடிகை தான் ஜோடியா? இணையத்தில் வெளியான தகவல்!!

இதில், இந்திய அணியானது குரூப் Aயில் குவைத், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணியுடன் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வரும் ஜூன் 21ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள் இருக்கிறது. ஜூன் 24ம் தேதி நேபாளம் அணிக்கு எதிராகவும், ஜூன் 27ம் தேதி குவைத் அணிக்கு எதிராகவும் இந்திய அணி மோத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here