பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை தட்டி தூக்கிய இந்தியா…, உலக கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தல்!!

0
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை தட்டி தூக்கிய இந்தியா..., உலக கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தல்!!
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை தட்டி தூக்கிய இந்தியா..., உலக கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தல்!!

ஆடவருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10 வது சீசன் சலாலா மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சவுத் கொரியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற்று விளையாடின. இதன் அரையிறுதி போட்டியில், சவுத் கொரியாவை வீழ்த்தி இந்திய அணியும், மலேசியா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில், ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கிய இந்திய அணியின் அங்கத் சிங் மற்றும் அரிஜித் சிங் ஹண்டல் 13 வது மற்றும் 20 வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து, 38 வது நிமிடத்தில் பாகிஸ்தானின் அலி ஒரு அடித்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இந்திய அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றது. இதனால், உலக கோப்பைக்கும் இந்திய அணி தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here