ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று இலங்கையில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாட தயாராகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த போட்டி என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு துளிக் கூட பஞ்சம் இருக்காது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும், இந்த ஆசிய கோப்பையில் ஏற்கனவே பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றதுடன், ஐசிசியின் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பெற்று பலத்துடன் உள்ளது. இதை போல இந்திய அணியும் இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவங்க எண்ணும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரம்: மதியம் 3.00 PM
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் HOTSTAR
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
இந்தியா (பிளேயிங் லெவன்):
ரோஹித் சர்மா (சி), ஷுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்):
ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(சி), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப்.
டாஸ்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் அணி பீல்டிங் செய்ய தயாராகி வருகிறது.