IND vs NZ 3rd ODI: 16 மாதத்திற்கு பிறகு சதம் விளாசிய ரோஹித் சர்மா!!

0
IND vs NZ 3rd ODI: 16 மாதத்திற்கு பிறகு சதம் விளாசிய ரோஹித் சர்மா!!
IND vs NZ 3rd ODI: 16 மாதத்திற்கு பிறகு சதம் விளாசிய ரோஹித் சர்மா!!

ஒருநாள் அரங்கில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் ரோஹித் சர்மா சதம் விளாசி ஆஸ்திரேலிய ஜாம்பவான் சாதனையை சமன் செய்துள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக 3வது ஒருநாள் போட்டியை இந்தூரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இவர்கள் இருவரும், இணைந்து முதல் விக்கெட்டுக்கு 212 குவித்து அசத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், கேப்டனான ரோஹித் சர்மா மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்துள்ளார். இதற்கு இடைப்பட்ட காலத்தில், டி20 போட்டிகளில் சதம் அடித்தாலும், ஒருநாள் அரங்கில் சதம் அடிக்க தவறியே வந்தார். இந்நிலையில், 16 மாதங்களுக்கு பிறகு தனது சர்வதேச சதத்தை ரோஹித் அடித்து, சதத்திற்க்கான ஏக்கத்தை நிவர்த்தி செய்துள்ளார்.

ஐசிசி அணியில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் & முகமது சிராஜ்-க்கு இடம்!!

இவர், இன்று நியூசிலாந்துக்கு எதிராக 85 பந்தில் 9 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 101 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம், ஒருநாள் அரங்கில் ரோஹித் சர்மா தனது 30 வது சதத்தை விளாசி ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் ஒருநாள் சதத்திற்கான சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் ஒருநாள் 30, டெஸ்ட் 8 மற்றும் டி20 யில் 4 என மொத்தமாக 42 சதங்களை அடித்து ரோஹித் சர்மா அசத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here