நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்தியா…, ராகுல் டிராவிட் இடத்தை பிடித்த மாற்று பயிற்சியாளர்!!

0
நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்தியா..., ராகுல் டிராவிட் இடத்தை பிடித்த மாற்று பயிற்சியாளர்!!
நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்தியா..., ராகுல் டிராவிட் இடத்தை பிடித்த மாற்று பயிற்சியாளர்!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் வரும் 18 ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணிக்கு மாற்று பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயிற்சியாளர்:

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்கான தனது யுத்தத்தை முடித்த நிலையில், அடுத்தக்காக வரும் 18 தேதி முதல் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கு, நியூசிலாந்துக்கு எதிராக, இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இருக்கின்றனர். இதில், டி20 போட்டிகள் முறையை வரும் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் முறையை 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடருக்கான அணிகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல, பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, இடைக்கால பயிற்சியாளராக வி வி எஸ் லட்சுமணன் நியமனம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தோற்றதற்கு ஐபிஎல் தான் காரணமா?? முன்னாள் வீரர்கள் கடும் குற்றச்சாட்டு!!

நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (C), இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாழ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ஷிகர் தவான் (C), ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஷாபாஸ் அஹ்மத், யுகே. , குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here