IND vs NZ ODI: தவான் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி…, அதிக வெற்றி வாய்ப்பு யாருக்கு?? முழு விவரம் உள்ளே!!

0
IND VS NZ.., தொடரை கைப்பற்ற போவது யார் தெரியுமா?? வெளியான முழு விவரம் !!
IND VS NZ.., தொடரை கைப்பற்ற போவது யார் தெரியுமா?? வெளியான முழு விவரம் !!

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாட திட்டமிட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, ஒரு போட்டியில் வென்றும், மற்றொரு போட்டியை டிரா செய்தும் டி20 தொடரை கைப்பற்றியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து, இந்திய அணி ஒருநாள் தொடரை வரும் 25ம் தேதி முதல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், தவான் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த வருடத்தில், தவான் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடி தொடரையும் கைப்பற்றி உள்ளது.

மான்செஸ்டர் அணியிலிருந்து ரொனால்டோ விலகல்…, சோகத்தில் ரசிகர்கள்…, ட்விட்டரில் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

இந்த தொடர்களில், இந்திய அணி 9 போட்டிகளில் 8 ல் வெற்றி பெற்று, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எதிர்வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இந்திய அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர்கள் முறையே, நவம்பர் 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ஷிகர் தவான் (C), ரிஷப் பந்த், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here