IND vs NZ: 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா…, அதிரடியாக சதம் விளாசிய டாம் லதாம்!!

0
IND vs NZ: 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா..., அதிரடியாக சதம் விளாசிய டாம் லதாம்!!
IND vs NZ: 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா..., அதிரடியாக சதம் விளாசிய டாம் லதாம்!!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

IND vs NZ:

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, இன்று ஈடன் பார்க் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியை தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் 77, சுப்மன் கில் 50 ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து, ரிஷப் பந்த் 15, சூர்யகுமார் யாதவ் 4, சஞ்சு சாம்சன் 36 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்திருத்தது. இதில், அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 80 மற்றும் வாஷிங்டன் சுந்தர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 37* ரன்கள் எடுத்திருந்தனர். நியூசிலாந்து சார்பில், டிம் சவுத்தி மற்றும் லாக்கி பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

உலக கோப்பையில் களமிறங்கிய தோனி…, வைரலாகும் புகைப்படம்!!

307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், ஃபின் ஆலன் 22, டெவோன் கான்வே 24, டேரில் மிட்செல் 11 ரன்களுடன் வெளியேறினர். இதையடுத்து, கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லதாம் இந்தியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால், நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் லதாம் 104 பந்துகளில் 19 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 145* மற்றும் கேன் வில்லியம்சன் 94* ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா சார்பாக உம்ரான் மாலிக் 2 விக்கெட்டையும், ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here