IND vs NZ: இஷான் கிஷனுக்கு அடுத்த போட்டிகளில் விளையாட தடையா?? வெளியான தகவல்!!

0
IND vs NZ: இஷான் கிஷனுக்கு அடுத்த போட்டிகளில் விளையாட தடையா?? வெளியான தகவல்!!
IND vs NZ: இஷான் கிஷனுக்கு அடுத்த போட்டிகளில் விளையாட தடையா?? வெளியான தகவல்!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் செய்த செயலுக்கு, 4 போட்டிகள் விளையாட தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஷான் கிஷன்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 2 போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், நாளை 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற இருக்கிறது. இதில், கடந்த ஆண்டு இறுதியில், பங்களாதேஷிற்கு எதிராக இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன் மீது இந்த ஒருநாள் தொடரில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், முதல் இரண்டு போட்டிகளில், 5, 8* என்ற ரன்களிலேயே வெளியேறி ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தார். இவர், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய அணியில் கே எல் ராகுல் இல்லாத நிலையில், விக்கெட் கீப்பராகவும் இஷான் கிஷன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவர் நாளைய போட்டியில், களமிறங்குவாரா என்பது கேள்வி குறியாகி உள்ளது.

காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா & போபண்ணா ஜோடி…, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரம்!!

அதாவது, முதல் ஒருநாள் போட்டியில், டாம் லாதம் பேட்டிங் செய்யும் போது, இஷான் கிஷன் வெறும் கையால், ஸ்டெம்பை தட்டி விட்டு, அவுட் என அப்பீல் செய்தார். இவர் வேடிக்கையாக செய்த செயலுக்கு, அம்பயர் நாட் அவுட் என்று கூறியுள்ளார். தேவையில்லாத இந்த செயலுக்கு, விதி படி பார்த்தால் குறைந்தது 4 ஒருநாள் அல்லது 12 டி20 போட்டிகளில் விளையாட இஷான் கிஷனுக்கு தடை விதிக்க கூடும். ஆனால், இது குறித்து கள அம்பயர்கள் மேல்முறையீடு எதுவும் செய்யாத நிலையில், இஷானுக்கு தடை விதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here