ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எதிர் நோக்கி இந்தியா…, நியூசிலாந்துக்கு எதிராக பலபரீட்சை!!

0
ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எதிர் நோக்கி இந்தியா..., நியூசிலாந்துக்கு எதிராக பலபரீட்சை!!
ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எதிர் நோக்கி இந்தியா..., நியூசிலாந்துக்கு எதிராக பலபரீட்சை!!

இந்திய அணி ஐசிசியின் ஒருநாள் தரவரிசையில், முன்னேற்றம் காண்பதற்கு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ:

இந்திய அணியானது, இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றி ஐசிசி தரவரிசையில், 110 புள்ளிகளுடன் 4 வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த தரவரிசையில் இந்திய அணி டாப் 2 வில் நுழைய அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது, நியூசிலாந்து அணியானது, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில், இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த இரு தொடர்களில், இந்திய அணி ஒருநாள் தொடரை முழுவதுமாக (ஒயிட் வாஷ்) செய்யும் பட்சத்தில், 4 புள்ளிகளை பெற்று 114 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த ஐசிசியின் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில், நியூசிலாந்து அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஒருவேளை, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி இழக்கும் எனில், முதலிடத்தில் இருந்து சரியக்கூடும்.

இதனால், இந்திய ஒருநாள் தரவரிசையில், முன்னிலை பெற, நாளை முதல் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில், இங்கிலாந்து (113), ஆஸ்திரேலியா (112) 2 வது மற்றும் 3 வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here