“T20யில் சுப்மன் கில்லுக்கு பதில் இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுங்க”…, பாகிஸ்தான் வீரர் பளிச் பேட்டி!!

0
"T20யில் சுப்மன் கில்லுக்கு பதில் இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுங்க"..., பாகிஸ்தான் வீரர் பளிச் பேட்டி!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை இந்திய அணி 3 வது டி20 போட்டியில் விளையாட உள்ள நிலையில், பிளேயிங் லெவனில் சுப்மன் கில்லுக்கு பதில் இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.

சுப்மன் கில்:

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். இதையடுத்து, நாளை 3வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சுப்மன் கில்லுக்கு பாதியில் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது. அதாவது, சுப்மன் கில் ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கினாலும், டி20 போட்டிகளில் சொற்ப ரன்களிலேயே வெளியேறி வருகிறார். இவர், கடந்த இரண்டு போட்டிகளிலும், 7 மற்றும் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு?? வெளியான நியூ அப்டேட்!!

ஆனால், இவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், 208, 40*, 112 ரன்கள் என தனது சிறந்த பார்மை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில், சுழற்பந்து வீச்சை சமாளிப்பது குறித்து சுப்மன் கில் தெளிவாக கற்றுக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். மேலும், இவர் 3வது டி20 போட்டியில், பிரித்வி ஷாவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here